ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (13:08 IST)

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நாயகியாகும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நாயகி!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ரிது வர்மா சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சிவகார்த்திகேயன் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக ரிதுவர்மா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரிதுவர்மா பிரபலம் என்பதால் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் 
 
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது