திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (18:38 IST)

மாஸ்டர் அப்பாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங்.! அப்பவே ஆரம்பிச்சுட்டாங்களா!

மாஸ்டர் அப்பா மற்றும்  தம்பியுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ரித்திகா சிங்.! 
 

 
மிக்சடு மார்ஷியல் பாக்ஸராக பயிற்சி பெற்று இறுதிச்சுற்று படத்தின் மூலம்  நடிகையாகப் பிரபலமான ரித்திகா சிங் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.
 
அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்த அவர்  தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மெருக்கேற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது தந்தை மற்றும் தம்பியின் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரித்திகா,  ஹேப்பி பர்த்டே அப்பா என்று கூறி,  தனது தந்தை தான் எனக்கு பாக்சிங் கற்றுக்கொடுத்த ஆசான் என்று குறிப்பிட்டுள்ளார்.