வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (14:37 IST)

ரஞ்சித் தலித் நடிகர்களை மட்டும் நடிக்க வைக்கிறாரா? ரித்விகா பதில்!

நடிகை ரித்விகா சமீபத்தில் தன் மீது வைக்கப்பட்ட மோசமான விமர்சனங்களுக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை ரித்விகா பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் ரசிகர் ஒருவர் ’பருவத்தில் பன்னி கூட அழகாகத்தான் இருக்கும்’ என்று ’எஸ் சி பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரித்விகா ’சரிங்க மிஸ்டர் பாடு... சாரி மிஸ்டர் மாடு’ என்று பதிலடி கொடுத்துள்ளார் ரித்விகாவின் இந்த தைரியமான பதிலடி ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை ரித்விகா பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் ரசிகர் ஒருவர் ’பருவத்தில் பன்னி கூட அழகாகத்தான் இருக்கும்’ என்று ’எஸ் சி பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரித்விகா ’சரிங்க மிஸ்டர் பாடு... சாரி மிஸ்டர் மாடு’ என்று பதிலடி கொடுத்துள்ளார் ரித்விகாவின் இந்த தைரியமான பதிலடி ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் ரித்விகா தான் தலித் இல்லை என்று சொல்வதற்காகவே அந்த பதிவை எழுதியாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த சர்ச்சைகளுக்கு சமீபத்தில் பதிலளித்துள்ள ரித்விகா ‘நான் சொல்ல வந்த கருத்தைப் புரிந்துகொண்டு சிலர் என்னை பாராட்டினார்கள். ஆனால் ஒரு சிலரோ நான் என் மீதுள்ள தலித் முத்திரையை போக்கவே அப்படி பதிவிட்டதாக கூறியுள்ளனர்.’ என மறுப்பு தெரிவித்தார். மேலும் ரஞ்சித் படங்களில் தொடர்ந்து நடிப்பதால் இப்படிப்பட்ட கமெண்ட் வருகிறதா என்ற கேள்விக்கு ‘ரஞ்சித் தன் படங்களில் தலித் நடிகர்களை மட்டும் நடிக்க வைப்பதில்லை’ எனக் கூறியுள்ளார்.