திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (09:03 IST)

பிரபல காமெடி நடிகருக்கு ஆண் குழந்தை: அர்னால்ட் போல் வருவார் என ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய், காதலும் கடந்து போகும், ஆண்டவன் கட்டளை, புரியாத புதிர், ஒரு நல்ல நேரம் பாத்து கதை சொல்றேன், ஓ மை கடவுளே  உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ரமேஷ் திலக் 
 
ரமேஷ் திலக் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல ஆர்ஜே நவலட்சுமி என்பவரை திருமணம் செய்த நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்று காலை தனியார் மருத்துவமனை ஒன்றில் ரமேஷ் திலக்-நவலட்சுமி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை ரமேஷ் திலக் தனது டுவிட்டரில் ’எனக்கு ஒரு தலைவன் பிறந்திருக்கிறான்’ என்று பதிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதே நாளில் தான் கிறிஸ்டோபர் நோலன், அர்னால்டு உள்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் பிறந்ததாகவும் அதே போல் உங்கள் மகனும் திரைத் துறையில் பிரபலமாக வருவார் என்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ரமேஷ் திலக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது