திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:17 IST)

திருத்தணி கோவிலில் ‘குக் வித் கோமாளி’ ரித்விகா: வைரல் புகைப்படங்கள்

திருத்தணி கோவிலில் ‘குக் வித் கோமாளி’ ரித்விகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நாளை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை பார்க்கபல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் கூடிய இந்த நிகழ்ச்சி நாளை 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான ரித்விகா, தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார் என்பது தெரிந்ததே
ரித்விகா சமீபத்தில் திருத்தணி முருகன் கோயில் சென்றதாகவும் அங்கு சுவாமியை வழிபட்டதாகவும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். திருத்தணி முருகனின் ஆசி தனக்கு கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் திருத்தணி கோவில் முன் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.