சன் டிவி சீரியலில் 'பேட்ட' பட புரமோஷன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி பொங்கலுக்கு இணையான தித்திப்பான வசூலை கொடுத்து கொண்டிருக்கின்றது. பழைய ரஜினியை மீண்டும் திரையில் பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்த படத்தை பார்த்து வருவது இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம என்றால், சன் பிக்சர்ஸ் புரமோஷனும் இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக உள்ளது.
அந்த வகையில் இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 'கல்யாண வீடு' என்ற சீரியலில் 'பேட்ட' படத்தின் புரமோஷனும் கலந்துள்ளது. இந்த சீரியலில் நடித்தவர்கள் 'பேட்ட' படத்தை பார்த்து ரசிப்பது போல் ஒரு காட்சி இருப்பதாகவும், இன்றைய தொடரில் இந்த காட்சி ஒளிபரப்பவிருப்பதாகவும் வீடியோ புரமோஷன் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஜினி நடித்த 'கபாலி' திரைப்படம்தான் அதிகபட்சமாக கலைப்புலி எஸ்.தாணு அவர்களால் புரமோஷன் செய்யப்பட்ட படம் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படத்திற்கு இணையாக 'பேட்ட' படத்திற்கும் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு அதிகபட்சமாக புரமோஷன் செய்தவர் '