ஐஸ்வர்யாவை தேர்ந்தெடுத்து ஏன்! சிவகார்த்திகேயன்...

sivakarthikeyan
VM| Last Modified வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (18:35 IST)
கனா இசை மற்றும் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. இந்த விழாவில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யாவை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியதாவது:"இந்த படத்தை எடுக்கனும்னு முடிவு பண்ணிய பிறகு ஆடிசன்லாம் வச்சோம். செலக்ட் பண்ணுனோம். ஐஸ்வர்யாகிட்ட கேட்டேன். அவங்க எங்கிட்ட கிரிக்கெட் தெரியாது, ஆனால் நடிக்கிறேன்னு சொன்னாங்க, எனக்கு ஒன்னுமே புரியல. நல்லா நடிக்கிறாங்க, இன்டர்நேசனல் கிரிக்கெட்டுன்னு சொல்றோம்.

இதை இன்டர்நேசனல் பிளேயேர்ஸ் பார்ப்பாங்க.ஏனெனில் இதுதான்இந்தியாவின் முதல் பெண்களுக்கான கிரிக்கெட் படம். இதுக்குமுன்னாடி இதை பற்றி நாங்க ஆராய்ச்சி எல்லாம் பண்ணிபார்க்கல. உலக அளவு இதுவரைக்கும் இந்த மாதிரி படம் வரலைன்னு அருண்ராஜா தேடிட்டு சொன்னான்.


aishwarya rajesh

அதனால இந்த படத்தை எல்லாரும் பார்ப்பங்க யாரும் ஐஸ்வர்யாவ பார்த்து சிரிச்சுடக்கூடாதுன்னு நினைச்சோம். ஐஸ்வர்யா எங்ககிட்ட என்னை டெஸ்ட் பண்ணி பாருங்க, அப்படீன்னு சொன்னாங்க. அந்த நம்பிக்கையால்தான் இந்த படம் இவ்வளவு பெரிய அளவுக்கு அழகாக வளர்த்து நிற்குது. நிறைய அடி, நிறைய காயங்கள் அதெல்லாம் இந்த மாதிரி படங்கள் பண்ணும் போது பட்டுத்தான் ஆகனும்னு நினைக்கிறேன். இந்த ரோல் பண்ண ஐஸ்வர்யா நிறைய முயற்சி பண்ணியிருக்காங்க.அதுனால தான்இப்படி வந்துருக்கு." என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :