1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (15:26 IST)

மெர்சல் குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த யு-டியூப் நிறுவனம்

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு  ரிலீஸ் ஆகிறது.

 
நேற்று முன்தினம் விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் டீஸர் பல லட்சம் லைக்ஸுகளை பெற்று 14 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.
 
இந்நிலையில் யு-டியூப் நிறுவனம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் மெர்சல் படம் பற்றி கருத்து வெளியிட்டுள்ளது. அதில் Epic Thalabathi  என்று குறிப்பிட்டுள்ளனர், ஒரு தமிழ் படத்தின் டீசர் ரசிகர்களிடையே இவ்வளவு பெரிய வரவேற்பு பெறுவதை கண்டு வட இந்திய சினிமா கலைஞர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.