செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (11:42 IST)

வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

venthu
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது
 
மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை அடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படமும் நல்ல வெற்றி பெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்தபடத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வழக்கம்போல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது
 
ஏற்கனவே கமல் ரஜினி அஜித் விஜய் சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களின் தமிழகத்தில் ரிலீஸ் செய்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தையும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகியுள்ள்து.