1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (12:52 IST)

நன்றி சின்னவரே: உதயநிதிக்கு நன்றி கூறிய பார்த்திபன்!

parthiban
திமுக எம்எல்ஏ மற்றும் நடிகர் தயாரிப்பாளர் உதயநிதியை தற்போது திமுகவினர் சின்னவரே அழைத்து வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதியை சின்னவரே என்று அழைத்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
சாதாரண திரைப்படம் எடுப்பதற்கே அசாதாரண உழைப்பு தேவைப்படுகிறது, அசாதாரணமான #IravinNizhal படத்தை எடுக்க @rparthiepan சாரால் மட்டுமே முடியும். அவருக்கும் @arrahman சார் உள்ளிட்ட ‘இரவின் நிழல்’ டீம்-க்கும் என் வாழ்த்துகள்
 
உதயநிதி ஸ்டாலினின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சாதல் சாதாரணம்.சாதித்தல் அசாதாரணம்.  அதற்கான முயற்சியும் உழைப்பும் சதா ரணம். கண்டுணர்ந்து பாராட்டுதல் பெருங்குணம். உயர்த்திப் பிடிக்க உதவுதல் உயர்குணம். இந்நிமிட கடைசி முதல், அடுத்த முதல் வரை அங்கீகாரமே ஆக்ஸிஜன். நன்றி சின்னவரே!