திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (13:38 IST)

"பேசுற வாய் ஆயிரம் பேசட்டும் கேட்குற மூடுல நான் இல்லை" - சிம்பு

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேஹா ஆகாஷ், கேத்ரின் தெரசா , ரோபோ சங்கர், வம்சி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் "ரெட் கார்டு" பாடல் நேற்று வெளியாகி யுடியூபில் ட்ரெண்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 


 
தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. படத்தின் ரீமேக்காக  தற்போது தமிழில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் உருவாகிவருகிறது. 
 
இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.   நேற்று இப்படத்தின் ரெட் கார்டு பாடல் வெளியாகி சிம்புவின் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறது.
 
இந்த பாடலின் வரிகள் சிம்புவின் வாழ்க்கையை திரையிட்டு காட்டுவது போல் அமைந்துள்ளது. குறிப்பாக, "எனக்கா ரெட் கார்டு , எடுத்து பாரு என் ரெக்கார்டு" போன வரிகள் சிம்புக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. 
 

தற்போது இந்த பாடல் யுடியூப்  ட்ரெண்டிங்கில்  4 இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.