1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 19 பிப்ரவரி 2022 (10:04 IST)

மாலத்தீவை விட்டு வர மனசு வரலையா? கல்யாணம் ஆகியும் கன்னி பசங்களை கவரும் ரெபா ஜான்!

பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ரெபா ஜான் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.  2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 
 
ஆனால், இவரை பிரபலப்படுத்திய என்னமோ விஜய்யின் பிகில் திரைப்படம் தான். அந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஏற்று நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். தொடர்ந்து பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த ரெபா ஜான் தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். 
தற்போது இந்த தம்பதி மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். இந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்தார். இந்நிலையில் தற்போது  காதல் கணவருடன் boating சென்ற வீடியோ மற்றும் கூடவே கில்மாவான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளர்.