1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (17:48 IST)

இன்று தான் கடைசி நாள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் கமல்ஹாசன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகப் போவதாகவும் இன்று நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வதோடு அவரது பங்கு முடிய போவதாகவும் கூறப்படுகிறது
 
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிகளை கடந்த ஐந்து சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் இருப்பதால் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகப் போவதாகவும் மீண்டும் சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து அல்லது அடுத்த சீசனில் அவர் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது
 
கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.