இந்தியன் 2' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபலம்!

Last Modified செவ்வாய், 30 ஜூலை 2019 (18:02 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படம் தொடருமா? என்ற அளவில் இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டது. அதன்பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் சென்னை வந்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ஷங்கரை நேரில் சந்தித்து பேசியதை அடுத்து தற்போது இந்த படம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருப்பதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளது


இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரவிவர்மன் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் ரத்னவேல் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. ரத்னவேல் ஏற்கனவே ஷங்கரின் 'எந்திரன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ஐஸ்வர்யாராஜேஷ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :