1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (11:07 IST)

யாரை கேட்டு ஹோட்டலா மாத்துனீங்க? – சோனு சூட் மீது பாய்ந்தது புகார்!

சமீப காலத்தில் மக்களுக்கு அதிகமான உதவிகள் செய்து புகழ்பெற்ற நடிகர் சோனுசூட் மீது மும்பை மாநகராட்சி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சினிமாக்களில் வில்லன் நடிகராக பிரபலமானவர் சோனு சூட். கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியது, விவசாயிக்கு ட்ராக்டர் வழங்கியது என பல்வேறு மக்கள் சேவையால் தற்போது இந்தியா முழுவதும் அறியப்பட்டவராக இருக்கிறார் சோனு சூட்.

இந்நிலையில் சோனு சூட் குறித்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. சோனு சூட்டுக்கு சொந்தமான 6 அடுக்கு கட்டிடம் ஒன்று மும்பை ஜுஹூ பகுதியில் உள்ளது. இதை சமீபத்தில் சோனு சூட் ஹோட்டலாக மாற்றியுள்ளதாகவும், அதற்கு உரிய அனுமதியை மாநகராட்சி நிர்வாகத்திடம் பெறவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.