வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (12:56 IST)

தளபதியை கொஞ்சிய ராஷ்மிகா வெட்கத்தில் விஜய் - கியூட் வீடியோ வைரல்!

நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யை கொஞ்சிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!
 
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். 
 
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 24ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய ராஷ்மிகா விஜய் வெட்கப்படுமளவிற்கு ரசித்து கொஞ்சிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.