வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (14:53 IST)

வித்யாசமான தோற்றத்தில் ராஷ்மிகா... அழகு நடிகைக்கு இது நல்லா இல்ல!

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் க்ரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் கீதா கோவிந்தம் ஹிட் அடித்ததால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். 
பின்னர் பேட்டி ஒன்றில் தன்னுடைய திரைப்பயணம் குறித்தும் அதன் வெற்றிகளை குறித்தும்  பேசிய ராஷ்மிகா தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டியையோ ரக்‌ஷித் ஷெட்டியை பற்றியோ எதுமே பேசவில்லை. இதனால் கன்னட திரைப்படங்களில் அவர் நடிக்க கூடாது என ரெட் கார்ட் கொடுத்து ஒதுக்கியது. 
 
அதையடுத்து பாலிவுட் சினிமாவில் மட்டும் தான் நல்ல நல்ல ரொமான்டிக் பாடல்கள் உள்ளது. தென்னிந்திய சினிமாக்களில் ஐட்டம் பாடல்கள், கவர்ச்சி குத்து டான்ஸ், கில்மா பாடல்கள் தான் உள்ளது என கூறி தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். 
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுமந்தா குறித்து பேசிய ராஷ்மிகா தற்போது முற்றிலும் வித்யாசமான தோற்றத்தில் எடுத்துக்கொண்ட கிரேசி போட்டோக்களை வெளியிட்டு கிக்கு ஏத்தியுள்ளார்.