ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட வனிதா - உயிருக்கு ஆபத்தா? உருக்கமான பேட்டி!

சர்சைக்குரியவராக சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை வனிதா விஜயகுமார். விஜயகுமார் வீட்டு வாரிசாக இருந்தும் அந்த குடும்பத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். இதனிடையே திருமண சர்ச்சைகளில் சிக்கி கிண்டலுக்கும், விமர்சனத்திற்கும் ஆளானார். 
 
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். கூடவே திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விவகாரத்து செய்து பிரிந்த அவரது முன்னாள் முன்றாவது கணவர் பீட்டர் பால் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். 
 
இந்நிலையில் தற்போது வனிதா, கிளாஸ்ட்ரோஃபோபியா என்ற நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இது தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளார். அந்த நோயால் மிகவும் அவதி பட்டும் வரும் அவர் சின்ன இடங்களில் தன்னால் இருக்க முடியாது என்றும் லிப்ட், கழிவறை போன்ற இடங்களிலும் அதிக நேரத்தை தன்னால் செலவழிக்க முடியாது. இது என் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் பெரிய ஆபத்து நேரிடலாம் என உருக்கமாக கூறியுள்ளார்.