1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (07:24 IST)

ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூலா?... 1000 கோடி வசூலை நோக்கி அனிமல்!

விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்போது ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  அனிமல் படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனாலும் இந்த படம் வசூலில் இந்தியா முழுவதும் கலக்கி வருகிறது. முதல் நாளில் 116 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் குறையாமல் வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் 527 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனிமல் திரைப்படம் திரையரங்குகள் மூலமாக 1000 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.