1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 5 டிசம்பர் 2020 (15:35 IST)

ராமர் கோயில் அறக்கட்டளை நிதியில் மோசடி – ராம்விலாஸ் வேதாந்தி புகார்!

ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நிதியில் மோசடி நடந்துள்ளதாக முன்னாள் பாஜக எம்பி புகார் கூறியுள்ளார்.

நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கா பணிகள் கோலகலமாய் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கின. இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்து முடிந்தது. இந்நிலையில் ராமர் கோயில் தொடர்பான போராட்டங்களில் விஷ்வ இந்து பரிஷத்துடன் இணைந்து செயல்பட்ட பாஜக முன்னாள் எம்பியான ராம்விலாஸ் வேதாந்தி அறக்கட்டளை நிதியில் மோசடி நடந்துள்ளதாக புகார் கூறியுள்ளார்.

இவர் அறக்கட்டளையில் தன்னையும் வேறு சில சாதுக்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் எனக் கூறிவந்தார். ஆனால் அவரை உறுப்பினராக சேர்க்கவில்லை. இந்நிலையில் அவரின் இந்த குற்றச்சாட்டு சலசலப்பை உருவாக்கியுள்ளது.