திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (13:19 IST)

23 வருஷத்துக்கு அப்புறமும் இந்த டயலாக் உங்களுக்கு பொருந்தும்: ரஜினிக்கு ரம்யா கிருஷ்ணன் வாழ்த்து

rajini ramya
23 வருஷத்துக்கு அப்புறமும் இந்த டயலாக் உங்களுக்கு பொருந்தும்: ரஜினிக்கு ரம்யா கிருஷ்ணன் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படக்குழுவினர் அவருக்கு வீடியோ ஒன்றின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
அதில் இயக்குனர் நெல்சன், விநாயகன், சிவராஜ்குமார் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
23 வருஷத்துக்கு அப்புறம் இந்த டயலாக் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று கூறி என்னுடைய படையப்பா இப்போது என்னுடைய ஜெயிலர் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் உங்களை விட்டு போகலை’ என்ற வசனத்தையும் அவர் கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva