நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சினிமாவில் அறிமுகம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளாதாகத் தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் புதிய நடிப்புப் பரிணாமத்தைத் தோற்றுவித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் மதிப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிவாஜியின் ஒரு மகன்களான ராம்குமார், பிரபு இருவரும் சினிமாவில் நடித்துள்ளனர். இந்நிலையில் ராம்குமாரின் மகன் விரைவில் நடிக்கவுள்ளார்.
மேலும்,இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ராம்குமார் மகன் தர்ஷன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே விக்ரம் பிரபு ஹீரோவாக புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.