செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (16:58 IST)

நடிகர் ராஜீவ் கபூர் காலமானார்… பாலிவுட் ரசிகர்கள் இரங்கல்!

நடிகர் ராஜ்கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மற்றும் இயகுனர் ராஜ் கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர் தனது தந்தையால் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப் பட்டார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய பணிகளில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்துவிட்டதாக அவரின் அண்ணன் மனைவி நீது கபூர்  சமூகவலைதளம் வாயிலாக தெரிவித்துள்ளார்.