ஷங்கரை நெருக்கும் பிரச்சனைகள்… உஷாராகும் ராம்சரண் தேஜா!
இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பினர் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சுமூகமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஷங்கருக்கும் லைகாவுக்கும் இடையே பிரச்சனை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருந்த நடிகர் ராம் சரண் தேஜா இந்த பிரச்சனைகளால் குழப்பத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷங்கரை நம்பி காத்திருப்பதற்கு பதில் அதற்குள் படத்தில் நடித்துவிட்டு வந்துவிடலாம் என்ற முடிவில் அவர் இருப்பதாக சொல்லப்படுகிறது.