1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (21:33 IST)

ஹனிமூனில் பிகினி அணிந்த காமெடி நடிகைக்கு விவாகரத்து? நடிகையின் பதில்!

பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து பல படங்களில் இப்போது நடித்து வருகிறார்.
 
அண்மையில் தான் சஞ்சய் என்பருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஹனிமூன் சென்ற போது பிகினி அணிந்து தொடை கவர்ச்சியை காட்டி பீச்சில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் உங்களுக்கு எப்போ விவாகரத்து? என கேட்டிருந்தனர். 

அதற்கு பதிலளித்துள்ள வித்யுலேகா ராமன், நீச்சல் உடை அணிந்தால் விவாகரத்தா? முதலில் உங்கள் எண்ணத்தை 1920களிலிருந்து 2021க்கு கொண்டு வாங்க. ஒரு பெண்ணின் உடை அவரின் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தால் அப்போ நல்ல உடைகள் அணியும் பெண்களின் வாழ்க்கை நல்லா இருக்கா? என நச் கேள்வியுடன் தெளிவான பதில் அளித்துள்ளார்.