திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (08:58 IST)

‘கரகாட்டகாரன் 2 பார்ட் வேண்டாம்’… சாமானியன் பட மேடையில் பேசிய ராமராஜன்

ராமராஜன் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் வணிகா சினிமாவின் கிளாஸிக்குகளில் கரகாட்டக்காரன் படத்துக்கு நீங்காத இடம் உண்டு. 1989 –ல் வெளியான இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி மற்றும் செந்தில் எனப் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் அனைவராலும் விரும்பிக் கேட்கப்பட்டு கொண்டு வருகிறது.

வெளியாகி 33 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் இருப்பதாக கடந்த ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் தெரிவித்திருந்தார்.. இது சம்மந்தமாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இடம்பெறுவார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது சாமானியன் என்ற படத்தில் நடித்துள்ள ராமராஜன் அந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பார்ட் 2 என்பதே வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதில் “இயக்குனர் கங்கை அமரன் அண்ணன் கரகாட்டகாரன் பார்ட் 2 பற்றி பேசினார். நான் அவரிடம் அண்னே கரகத்த வச்சு ஆடியாச்சு… படமும் ஓடியாச்சு… கேர்புல்லா இருக்கணும்… அந்த பார்ட்2 வேண்டாம் எனக் கூறிவிட்டேன்” என்று பேசியுள்ளார்.