திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (09:21 IST)

அக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா !

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி. 

 
பிரபல பாலிவுட் நடிகரும், ரஜினிகாந்த் நடித்த ’2.0’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீட்டில் தனக்குத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.
 
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவருடன் பணிபுரிந்த 100 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டது என்பதும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.