1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (14:20 IST)

ராம் கோபால் வர்மாவின் படப்பெயர் 'சசிகலா'

கோபால் வர்மா சுருக்கமாக ஆர்.ஜி.வி என அறியப்படுபவர். இவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ராம் கோபால் வர்மா தன்னுடைய படத்திற்கு ‘சசிகலா” (Shashikala) என்று பெயர் வைத்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 
இது குறித்து அதில் பிரபலமான அரசியல்வாதி ஒருவரின் நெருக்கமான நண்பரைப் பற்றிய முற்றிலும் கற்பனையான கதைதான் இது. ஜெயலலிதா வேறு யாரைவிடவும் தன்னுடைய தோழி சசிகலாவுடன் இருந்ததோடு அவரை அதிகமாக மதித்தார். அதனால்தான் இந்தப் படத்தற்கு சசிகலா என்று பெயர் வைத்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
 
மேலும் நான் ஜெயலலிதா அவர்களை மிகவும் மதிக்கிறேன். அதேப்போல் சசிகலா அவர்கள் மீது எனக்கு மிக மிக அதிகமான மரியாதை வைத்திருக்கிறேன். இந்தப் படம் சசிகலாவின் கண்களால் ஜெயலலிதாவைப் காட்டும் என்றும் ஜெயலலிதாவை ஜெயலலிதாவின் கண்களாலேயே பார்ப்பதில் இருந்து இது மாறுபட்ட கோணத்தில் அமையும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.