ஷங்கர் படத்துடன் மோதும் ‘குட் பேட் அக்லி’.. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் எப்போது?
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே தினத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளன.
அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், ஏற்கனவே குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் தான் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் வெளியீடு என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
பொங்கல் தினத்தில் அஜித் மற்றும் ஷங்கர் படம் வெளியாக உள்ள நிலையில், பாலாவின் வணங்கான் படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva