இதுதான் என்னோட கடைசி டுவீட்: சோகத்துடன் வெளியேறிய ராம்கோபால்வர்மா
கடந்த பல ஆண்டுகளாக டுவிட்டரில் ஆக்டிவ் ஆக இருந்தவர் ராம்கோபால் வர்மா என்பது அனைவருக்கும் தெரியும். சுப்பிரமணியம் சுவாமிக்கு அடுத்து அதிகபட்சமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர் இவராகத்தான் இருக்கும்
ரஜினி முதல் சாதாரண நடிகர் வரை ,பிரதமர் முதல் சாதாரண அரசியல்வாதி வரை இவரது விமர்சனத்திற்கு தப்பியவர்களே இல்லை எனலாம்.
இந்த நிலையில் நேற்று திடீரென டுவிட்டரில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது மில்லியன்கணக்கான ஃபாலோயர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தனது பதிவுகளால் சர்ச்சைகள் வெடிப்பதோடு, பல வழக்குகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், அதுமட்டுமின்றி தனக்கு வேலை அதிகம் இருப்பதால் டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாகவும், ராம்கோபால் வர்மா தனது கடைசி டுவிட்டீல் தெரிவித்துள்ளார். நெட்டிசன்கள் இனி யாரை வம்புக்கு இழுப்பது என்று யோசித்து கொண்டிருப்பதாக தகவல்