வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (08:58 IST)

வெளியானது ராம்கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் டிரைலர்… ரிப்பிட் மோடில் பார்க்கும் இளைஞர்கள்!

ராம்கோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள டேஞ்சரஸ் என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைய்யாவது வாடிக்கையாகிவிட்டது. இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது புதிதாக டேஞ்சரஸ் என்ற புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இதில் அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகிய இரு நடிகைகளும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. பி கிரேட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலரில் பெரும்பாலான காட்சிகள் கதாநாயகிகள் இருவரின் உடலையும் காட்சிப்படுத்தும் விதமாக உள்ளன. இதனால் டிரைலர் வெளியானதில் இருந்து அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.