திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 17 ஜூன் 2017 (06:51 IST)

ஆலுமா டோலுமா'வுக்கு ஆட்டம் போடும் முருகதாஸ் நாயகி

அஜித் நடித்த 'வேதாளம்' படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் உலகப்புகழ் பெற்றது என்பது அறிந்ததே. இந்த நிலையில் இன்று ஐதரபாத்தில் பிலிம்பேர் சவுத் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.



 


இந்த விழாவில் முன்னணி நடிகர் நடிகைகள் பலர் மேடையில் நடனமாடவுள்ளனர். அவர்களில் ஒருவர் முருகதாஸ் இயக்கி வரும் 'ஸ்பைடர்' படத்தின் நாயகி ராகுல் ப்ரித்திசிங்

இவர் அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலான 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு நடனம் ஆடவுள்ளாராம். கடந்த சில நாட்களாக இந்த பாடலுக்காக அவர் டான்ஸ் பிராக்டீஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் எந்த விழாவிலும் கலந்து கொள்ளாவிட்டாலும் அவரது பாடல் நிச்சயம் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.