திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (07:24 IST)

ஆகஸ்ட் 15க்குள் கொரோனாவுக்கு தடுப்பூசியா? விஞ்ஞானிகள் கைவிரிப்பு!

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கொண்டுவரப்படும் என ஐஎம்சிஆர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டறிவதில் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் விஞ்ஞானிகள் குழுவை நியமித்து தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவாக்சின் எனும் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவைக் கண்டுபிடித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் இதை பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமைப்பான  இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸ் மறுத்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி ’ஐசிஎம்ஆரின் இலக்கு சாத்தியமற்றது. அனைத்து விதமான விஞ்ஞான சோதனைகளையும் முடிக்காமல் தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்த முடியாது. இந்த அறிவிப்பானது மக்கள் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது’ எனக் குற்றம் சாட்டியுள்ளது.