1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2018 (19:21 IST)

தலைமறைவாகிய பிரபல தொகுப்பாளர்: காரணம் என்ன??

டோலிவுட் சினிமாவில் இருக்கும் தொகுப்பாளர்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர் பிரதீப். இவர் Koncham Touch Lo Unte Chepta என்ற நிகழ்ச்சியை ஜீ தெலுங்கு சேனலில் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தன்று இரவு பார்ட்டி முடித்துவிட்டு பிரதீப் தாறுமாறாக கார் ஒட்டி வந்தாக கூறப்படுகிறது. அப்போது போலீஸார் அவரை விசாரித்து, குடி சோதனை மேற்கொண்ட போது, குறைந்த பட்ச அளவை விட ஐந்து மடங்கு அதிக அளவில் போதையாக இருந்ததாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து போலீஸார் அவரது காரை பரிமுதல் செய்து, அவரது வீட்டில் கொண்டு பிரதீப்பை பத்திரமாக சேர்த்துள்ளனர். மேலும், பிரதீப்பை ஆலோசனை பிரிவிற்கு அழைத்துள்ளானர்.
 
ஆனால், பிரதீப் குறித்த தேதியில் ஆலோசனை பிரிவிற்கு ஆஜாராகவில்லை. இதனால், அவரது வீட்டிற்கு சென்ரு பார்த்த போது, வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது அலுவலகத்திலும் அவரை காணவில்லை. எனவே, பிரதீப் தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது. 
 
பிரதீப் விரைவில் ஆஜாராகவில்லை என்றால் அவர் மீது வழக்கு பதியப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.