1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (18:24 IST)

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் பிக்பாஸ் 5 போட்டியாளர்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘டான்’ திரைப்படத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ராஜூ ஜெயமோகன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருப்பதாகவும் அவர் இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு பிரபல நடிகராக உருவாகி வருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
ஏற்கனவே கவின் நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தில் ராஜூ ஜெயமோகன் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.