பேட்ட ஷூட்டிங் வீடியோ லீக்! அதிர்ச்சியில் இயக்குனர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திகி, த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார், மேகா ஆகாஷ், சாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு லக்னோவில் நடந்து வருகிறது. அங்குள்ள மோகன்லால்கஞ் என்ற பழமையான சிவன்கோவிலில் வைத்து ரஜினி நடித்த காட்சிகள் லீக் ஆகி அது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக லக்னோவிற்கு சென்றது இதுவே முதன்முறையாகும்
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தின் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதாவது தயவு செய்து ஷூட்டிங் தளத்தில் இருந்து வீடியோ மற்றும் போட்டோ என எதுவும் எடுக்காதீர்கள், மேலும் லீக் ஆன இந்த வீடியோவை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர் . அதுமட்டுமல்லாது பிரபல செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவியில் இதை செய்தியாகவும் ஒளிபரப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.