அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தை விட விசாரணை ஆணையம் பாதுகாப்பானதுதான்... வழக்கறிஞர் ஆவேசம்!

Last Modified சனி, 20 மார்ச் 2021 (13:50 IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தில் ஆஜராக சொல்லி நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சமுகவிரோதிகள் புகுந்து விட்டனர் என ரஜினிகாந்த் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ரஜினியின் கருத்து குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக சொல்லி வலியுறுத்தியது. அனால் கொரோனா அச்சம் காரணமாக ரஜினிகாந்த் ஆணையத்தின் முன் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இப்போது விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் ‘அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தை விட விசாரணை ஆணையம் பாதுகாப்பானதுதான். அதனால் ரஜினிகாந்த் கொரோனா அச்சம் இல்லாமல் ஆஜராகலாம்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :