1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (11:30 IST)

தலைவர் கெட்டப்பே செம ஸ்மார்ட்டா இருக்கே! – தலைவர் 170 படப்பிடிப்பு இன்று முதல்!

Thalaivar 170
ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கும் நிலையில் ரஜினிகாந்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.



தமிழில் ஜெயின் படத்தை இயக்கிய த.ச.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் படம் தலைவர் 170. இந்த படத்தில் மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பேன் இந்தியா நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. முன்னதாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திர போஸ்டர்கள் வரிசையாக வெளியாகி வந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் இன்று நடிகர் ரஜினிகாந்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. கூலிங்கிளாஸ் அணிந்து கிளீன் ஷேவ்ல் ரூம்ஸ் மாட்டாரா ரஜினிகாந்த்தில் தோற்றமளிக்கிறார் இது ரசிகர்களிடையே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Edit by Prasanth.K