வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (11:31 IST)

லால் சலாம் அப்டேட்.. தலைவர் 170 அப்டேட்! – இன்னைக்கு ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Lal Salaam
இன்று ஒரே நாளில் ரஜினி நடிக்கும் இரண்டு படங்களின் அப்டேட்டுகள் வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘லால் சலாம்’. ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மதியம் 2 மணி அளவில் வெளியாக உள்ளது.

ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினி நடிக்கும் படம் தலைவர் 170. ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் அப்டேட்டுகளும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களும் வெளியாகி வருகிறது. ஒரே நாளில் ரஜினியின் இரண்டு படங்களுக்கான அப்டேட்டுகள் வெளியாகி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K