புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : சனி, 4 ஜனவரி 2020 (21:43 IST)

ரஜினி, அனிருத்துக்கு இசை கலைஞர்கள் சங்கம் கண்டம் !

தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவருக்கும் இசைக் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 9 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
 
இந்நிலையில்,  திரைப்பட இசைக் கலைஞர்கள்  சங்கம்  ரஜினி, அனிருத் இருவருக்கும் கண்டம் தெரிவித்துள்ளது.
 
அதில், தர்பார் படத்தில் 450 இசைக்கலைஞர்கள் பணியாற்றி இருகின்றனர். ஆனால் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
சங்கத்தில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு தராததால் அனிருத்துக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
மேலும், திரைபட இசைக் கலைஞர் சங்க தலைவர் தினா கூறும்போது, பேட்ட படத்தின் போதே சங்க கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென கூறினேன். அப்போது அடுத்த படத்தில் வாய்ப்பு அளிப்பதாக கூறிய அவர் தர்பார் படத்தில் தரவில்லை என தெரிவித்துள்ளார்.