1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (09:47 IST)

தினமும் என்னை அடித்து டார்ச்சர் செய்தார்கள்… முன்னாள் கணவர் குறித்து ராஜ்கிரண் மகள் பகிர்ந்த தகவல்!

நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா என்பவர் தொலைக்காட்சி நாடக நடிகர் முனீஸ் ராஜா என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இந்த திருமணத்திற்கு ராஜ்கிரன் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முனீஸ்ராஜாவை நம்ப வேண்டாம் என்றும் அவர் பணத்துக்காக எதையும் செய்வார் என்றும் கூறினார்.

ஆனால் ராஜ்கிரன் சொன்னதை கேட்காமல் முனீஸ் ராஜாவை ப்ரியா திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரின் திருமண உறவு முடிவுக்கு வந்தது. இது சம்மந்தமாக கடந்த பிப்ரவரி மாதம் பேசியிருந்த பிரியா தனது கணவரை இரண்டு மாதத்திற்கு முன்பே பிரிந்து விட்டதாகவும் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது ஒரு தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் “எங்கள் திருமணத்தை அவர் சட்டப்படி பதிவு செய்யவில்லை. அது சம்மந்தமாகக் கேட்டபோதுதான் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. என் அப்பாவிடம் இருந்து பணம் வாங்கிவர சொல்லி என்னை தினமும் அடித்து டார்ச்சர் செய்தார்கள். இனிமேல் அவரோடு வாழவே முடியாது என்ற நிலையில்தான் அவரைப் பிரிந்து வந்து என் அப்பாவின் காலில் விழுந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.