தெலுங்கில் அடுத்தடுத்து 6 படங்களில் கமிட் ஆன விஜய் சேதுபதி!

Last Modified புதன், 10 பிப்ரவரி 2021 (16:44 IST)

விஜய் சேதுபதிக்கு இப்போது தமிழ் தவிர மற்ற மொழிகளில் அதிகளவு வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இந்நிலையில் தமிழைத் தவிர பல மொழிகளில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

வரும் வெள்ளிக்கிழமை அவர் நடித்துள்ள உப்பேன்னா எனும் தெலுங்கு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு அங்கு வாய்ப்புகள் அதிகளவில் குவிய ஆரம்பித்துள்ளனவாம். அதில் 6 படங்களை ஒப்புக்கொண்டு கமிட் ஆகியுள்ளாராம் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்துக்கு 10 நாட்கள் என்ற வீதம் கால்ஷிட் ஒதுக்கியுள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :