’சர்தார் 2’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 திரைப்படத்தில் ஏற்கனவே இரண்டு நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ஆக ஒரு முன்னணி நடிகை இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு நடிகை ஆஷிகா ரகுநாத் இன்னொரு நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ரஜிஷா விஜயன் தமிழில் தனுஷ் நடித்த கர்ணன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ஜெய் பீம் படத்தில் நடித்திருந்தார் என்பதும் சர்தார் முதல் பாகத்திலும் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva