1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 3 மே 2021 (20:41 IST)

’கர்ணன்’ நாயகியின் 3வது படம்: இம்முறை ஜோடி சேருவது சூர்யாவுக்கு!

’கர்ணன்’ நாயகியின் 3வது படம்: இம்முறை ஜோடி சேருவது சூர்யாவுக்கு!
தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் நாயகி ரஜிஷா விஜயனுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது/ அந்த வகையில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் என்ற படத்திற்கு அவர்தான் நாயகி என அறிவிக்கப்பட்டது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது ரஜிஷா விஜயன் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ரஜிஷா விஜயன் நடிக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது
 
கூட்டத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் என்பவர் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது
 
சிறிய கேரக்டர்தான் என்றாலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக ரஜிஷா விஜயன் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது