புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (14:22 IST)

2.0 மீம்ஸ் குவியல் –கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்ஸ்!

ரஜினி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள 2.0 படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்ஸன் நடிப்பில் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படமான 2.0 மூன்று ஆண்டு இழுபறிகளுக்குப் பிறகு நேற்று ரிலிஸானது.

ரஜினியின் சிட்டி நடிப்பு, அக்‌ஷய் குமாரின் மிரட்டலான வில்லத்தனம் , வி எஃப் எக்ஸ் காட்சிகள் எனப் பலவற்றை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடினாலும் சில நெட்டிசன்களும் ஹாலிவுட் சினிமா ரசிகர்களும் படத்தைக் கண்டபடி கலாய்த்து வருகின்றனர். தமிழில் ஒரு ஹாலிவுட் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட 2.0 படத்தை அதிருப்தியடைந்துள்ளதாகவும் திரைக்கதை மிகவும் சுமாராகவுமே உள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் உலவவிட ஆரம்பித்துள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.