வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (15:19 IST)

தலைவரின் தர்பார் படத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடுங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் சென்னை உள்பட பல நகரங்களில் மாபெரும் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.   

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த இப்படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடித்திருந்தார். மேலும் காமெடி நடிகர் யோகி பாபுவின் கதாபாத்திரம் படத்தை சலிப்பு தட்டாமல் பார்க்கவைத்தது. மும்பை போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். ரஜினியின் தீவிர ரசிகரான ராக்ஸ்டார் அனிருத் செம எனர்ஜிடிக்கான பாடல்களை கொடுத்து தலைவர் ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால்  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தர்பார் படம்  சன் டிவியில் ஒளிபரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ சில நாட்களில் வெளியாகும். சன் டிவி பாணியில் சொல்லவேண்டும் என்றால் " திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்பம்" விரைவில்...