திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 13 மே 2024 (19:14 IST)

'வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அட்டகாசமான ஸ்டில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரஜினி, படக்குழுவினர்களிடமிருந்து விடைபெறும் காட்சியின் ஸ்டில் உள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல இடங்களில் நடந்தது என்பதும் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளதாகவும் இந்த படத்தை ஏற்கனவே அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுவினர்  திட்டமிட்டுள்ள நிலையில் அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க இரவு பகலாக படை குழுவினர் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Edited by Siva