ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 மே 2024 (07:39 IST)

இந்தியன் 2 ஆடியோ லான்ச்சுக்கு ரஜினி வரமாட்டாரா?... லைகா மீது அதிருப்தியா?

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல பிரச்சனைகளைக் கடந்து இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் 13 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. அதற்காக ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. அதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சிக்கு கமல், ஷங்கர் மற்றும் லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரன் ஆகிய மூன்று பேருக்குமே நெருக்கமானவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சிறப்பு விருந்தினராக அழைக்க உள்ளதாக சொல்லப்பட்து. ஆனால் லைகா நிறுவனம் மீது ரஜினிகாந்த் கொஞ்சம் அதிருப்தியில் உள்ளதால் இந்த நிகழ்வுக்கு வரமாட்டார் என சொல்லப்படுகிறது. லால் சலாம் படத் தயாரிப்பின் போது லைகா நடந்துகொண்ட விதம் ரஜினிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.