1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (17:02 IST)

திடீரென வைரலாகும் ரஜினியின் வீடியோ: வெளிநாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில மணி நேரம் முன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறி அதில் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற ஒரு டுவிட்டை பதிவு செய்தார். இந்த டுவிட்டில் குறிப்பிட்ட #இதுவும்_கடந்து_போகும் என்ற ஹேஷ்டேக் தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தற்போது ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் இந்த வீடியோவில் இருக்கும் ரஜினி வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு அறிவுரையும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். கொரோனா வைரஸால் முழு உலகமே பாதிப்படைந்துள்ளது. இதற்கு இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. உங்களைப் பிரிந்து வாழும் உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர்கள் சதா நேரமும் உங்களை பற்றி தான் சிந்தனை. உங்களைப் பத்திதான் அக்கரையில் உள்ளனர்.
 
நீங்கள் எந்த நாட்டில் வாழ்கின்றீர்களோ, அந்த நாட்டின் அரசு, எந்த கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார்களோ, அதை நீங்கள் தவறாமல் கடைபிடித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு இதுதான். கவலைப்படாதீர்கள்.. இதுவும் கடந்து போகும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார் ரஜினிகாந்தின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
#இதுவும்_கடந்து_போகும் என்ற ஹேஷ்டேக்கோடு இந்த வீடியோவையும் ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.