வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (06:52 IST)

சூப்பர் வைரலாகும் ஹிப்ஹாப் தமிழாவின் டான்ஸ் வீடியோ !

சிங்கிள் பசங்க, வாடி புள்ள வாடி, எனக்கு பிரேக்கப் என ஆடி, பாடி நடித்து அட்டகாசம் செய்யும் ஹிப்ஹாப் தமிழா ஆதி யங்ஸ்டர்ஸ்களின் பேவரைட் சிங்கரான பார்க்கப்படுகிறார். மைக்கல் ஜாக்சனின் ஜாம் என்ற பாட்டினை கேட்டு அவருக்கு ரசிகரான ஆதி பின்னர் அவரை போலவே ராப் பாடல்களை பாடி பிரபலமாகினார்.

இதற்கிடையில் மீசைய முறுக்கு , நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகி நடித்து புகழ்பெற்றார். இதுபோன்று இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் தனது திறமைகளை வெளிப்படுத்தி பலரையும் திரும்பி பார்க்க செய்தார்.சமீபத்தில் தான் Quarantine And Chill என்ற காதல் பாடலை வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில்  "மீசைய முறுக்கு" படத்தில் இடம்பெறும் டான்ஸ் ரிஹர்சல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செமையாக குத்தாட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.